Tuesday, February 11, 2025

நான் இல்லை நாம்

அல் குர்ஆனை எடுத்துப் பார்த்தால் அல்லாஹ் தன்னுடைய செயற்பாடுகளை பற்றி கூறும் இடங்களில் 'நான்' என்கிற பிரயோகத்தை பயன்படுத்துவதை விட 'நாம்' என்கிற பன்மை பிரயோகத்தை பயன்படுத்துவது தான் அதிகமாக இருக்கும். உதாரணமாக 'நாம் அனுப்பினோம், மீளவும் உயிர் கொடுத்து எழுப்புவோம்' என்பது போன்ற பிரயோகங்களை அடிக்கடி அல் குர்ஆனில் காணலாம். இதற்கு என்ன காரணம்?

அல் குர்ஆன் உரையாசிரியர்கள் "நான் என்பது ஈகோ சார்ந்தது. அது அல்லாஹ் கடுமையாக வெறுக்கும் ஒரு விடயம். 'நாம்' என்பது ஒரு பணிவுப் பிரயோகம். இதுதான் காரணமாக இருக்கலாம்" என்று கூறுகிறார்கள். வேறு சில தஃப்ஸீர் ஆசிரியர்கள் "மலக்குகளுக்கும் அல்லாஹ் சில பணிகளைக் கொடுத்துள்ளான் அவர்களுக்கு தனியாக இயங்க முடியாதாயினும் அவர்களையும் சேர்த்து சொல்கிறான்" என்று கூறுகிறார்கள். ஏனெனில் மலக்குகள் மறைவான நம்பிக்கை என்பதில் உள்ளடங்குபவர்கள். புலன்கள் மூலம் அறியவோ, உணரவோ முடியாதவர்கள். பிரபஞ்ச இயக்கத்தில் மலக்குகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள சில பொறுப்புகளையும் (உதாரணமாக, உயிர்களை கைப்பற்றல்) அறிவோம். ஆக மறைவான நம்பிக்கை எனும் வகையில் நாம் என்பது மலக்குகளையும் குறிக்கும் என்பதும் சரியான கருத்தே. ஆனால் முதலில் உள்ள கருத்து தான் மானிட சமூகங்களில் இறைவன் அடைய விரும்பும் இலக்குகளுக்கு இசைந்ததாக உள்ள கருத்து. 

சிந்திக்க வேண்டிய பன்மை!


Written By

Musthaq
Faculty of Science (R), 1st Year
University of Colombo

No comments:

Post a Comment

இஸ்லாம் கூறும் தாவரவியல் விஞ்ஞானம்

தாவரவியல் பற்றி அறிவியல் உண்மைகள் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் பல விடயங்கள் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றன. இங்கே...