இன்று நாம் ரமழானை நோற்றவர்களாக எங்களுடைய காலம் சென்று கொண்டிருக்கின்றது. முதலாவது பத்து எங்களை தாண்டிச் சென்று விட்டது. இரண்டாம் பத்தின் நடுவில் இருந்து கொண்டிருக்கின்றோம். அதுவும் இன்னும் சில நாட்களில் எம்மை விட்டு செல்லத்தான் போகின்றது. அதனை எம்மால் தடுத்து நிறுத்த முடியாது. ரமழான் வந்தது போனது என்று எம்மால் கூற முடியாது. முஸ்லிம்களாகிய நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். ஏன் ரமழானை நாம் நோற்க வேண்டும்? இதன் ஊடாக எமக்கு என்ன கிடைக்கப் போகிறது? இதனை நாம் கட்டாயம் செய்ய வேண்டுமா? என்று எம்மிடம் பல கேள்விகள் நாம் எழுப்ப வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இன்று வெறுமனே நோன்பு காலங்களில் தொப்பி அணிந்து நாங்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் தான் இன்று அதிகமானவர்களாக இருக்கின்றோம்.

வெறுமனே இப்தாருக்கு மட்டும் பள்ளிக்கு செல்கின்றோமே ஒழிய தொழுவதற்காக வருவது கிடையாது. உண்மையில் கவலை தரக்கூடிய ஒரு விடயமாக இருக்கின்றது. இன்று பல்லின சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இலங்கையில் நாம் எமது தனித்துவத்தை பேணி வாழ வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் எமது சகோதர இனத்தவர்கள் முஸ்லிம்கள் மீது ஒரு நல்ல பார்வை வைத்திருக்கின்றார்கள். நாங்கள் அவர்களுக்கு ஒரு முன்மாதிரி மிக்க சமூகமாக வாழ வேண்டிய தேவை இருக்கின்றது முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள்? இதனை எதற்காக செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று பல கேள்விகள் மாற்று மத சகோதரர்களிடமிருந்து எழுந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் அவர்களுக்கு முன்மாதிரி மிக்கவர்களாக நடக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். என்று இங்கு குறிப்பிட வேண்டும். முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் பலருக்கு உதவி செய்கின்றார்கள். உணவு இல்லாதவர்களுக்கு உணவினை வழங்குகிறார்கள். அவர்களின் கஷ்டங்களை உணரவே அவர்கள் இதனை மேற்கொள்கின்றார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளார்கள்.
ஆனால் இன்றைய தலைமுறை இற்றையெல்லாம் மறந்து நவீன தொழில்நுட்பத்தின் பால் தங்களுடைய நேரத்தினை செலவழித்து கொண்டிருக்கின்றார்கள் social media, facebook,whatsapp,tiktok,Instagram, youtube, போன்றவற்றின் மீது கவரப்பட்டு இருப்பது ஒருவகை காரணமாகும்.
இன்று dress shopping செய்வதில் கவனம் செலுத்தியும் இப்தார் செய்வதில் கவனம் செலுத்துகின்றோமே ஒழிய ரமழானின் உண்மை அர்த்தத்தினை அடைவதற்காக வேண்டி நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம். ஈகை, கொடை, தியாகம், புனிதத்துவம், சமத்துவம், புரிந்துணர்வு, நிறைந்த ரமழான் எம்மை விட்டு செல்லப் போகின்றது. இந்த வருடம் இருக்கும் நாம் அடுத்த வருடம் இருப்போமா என்ற நிலையற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ரமழான் என்னை விட்டு செல்லப் போகின்றது, எங்களை விட்டு செல்லப் போகின்றது நான் என்ன செய்திருக்கின்றேன் என்னில் என்ன மாற்றம் வந்திருக்கிறது என்பதை நினைத்து நாங்கள் கவலைப்பட வேண்டும். எனவே முஸ்லிம்களாகிய நாங்கள் இன்னும் ஓரிரு தினங்களில் புனிதமான ரமழானை பூர்த்தி செய்ய இருக்கின்றோம். எமக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி தந்த வழிமுறைகளை பின்பற்றி ரமழானை அழகான முறையில் ஏனையோருக்கு பாதிப்பில்லாமல் அமைதியான முறையில் கொண்டாடி ரமழானை முழுமையாக அடைந்தவர்களாகவும் சுவர்க்கத்திற்கு செல்லக்கூடியவர்களாக மாறுவோம்.
Written By
Jahankeer Mohamed jafeer
Faculty of Arts (R), 1st Year
University of Colombo
No comments:
Post a Comment