Thursday, March 27, 2025

காஸாவின் கதறல்கள்...


புனித பூமியாம் புகழ்பெற்ற நபிமார்கள்

ஆட்சி செய்த நகரமாம்

ஆரம்ப கிப்லாவாம்

அழகிய பள்ளிவாசல் அக்ஸா அமைந்த பிரதேசமாம்


அண்ணலார் பெருமானார்

அல் இஸ்ரா பயணம் மேற்கொண்ட நகரமாம் 

அருட் கொடையாய் இறைவன் அளித்த அன்பளிப்பான அழகிய 

இம்மஸ்ஜித் உள்ள பிரதேசமாம்


இவ்வளவு புகழ்பெற்ற இந்நகரிலே

இன்று இரத்தக்கறைகள் சுமந்து

சிதறி போய்க்கிடக்கின்ற சின்னஞ்சிறார்களின் உடல்கள் அடையாளம் 

அறிய முடியாமல் உடற்பாகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு 

திசையில் ஒதுக்கி வீசப்பட்டு கிடக்கின்றன



உடமை இழந்து, உறவு இழந்து, தினம் தினம் உணவு இழந்து உயிர் 

இழந்து தவிக்கிறார்கள்

சிறுவர், இளையோர் முதியோர் பெண்கள் ஆண்கள் என வேறுபாடு 

இன்றி போராடுகிறார்கள் தன் தேசத்திற்காக

நெஞ்சை உருக்கும் காட்சிகளாய்

கல்பையும் கரைய வைக்கும் காட்சிகள் 


தாயை இழந்து தவிக்கும் குழந்தையின் கண்ணீர்

கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தும் தாய்

வாழ்க்கை வாழ ஆரம்பித்த இளவயது இளைஞர் யுவதிகள்

கைகளில் தம் உறவுகளை ஏந்தியவன்னம் கண்ணிரினால் 

குளிப்பாட்டும் உறவுகள் என கண்ணைப்பறிக்கும் காட்சிகள்


ஐந்து நேரத் தொழுகை ஆறு நேரமாகியது (ஜனாஸா தொழுகை) - 

காஸாவில் 

நாட்கள் செல்ல செல்ல மரணமாகும் நபர்களின் எண்ணிக்கை கூடுகிறது

பரிதாபமாக பாராது அளிக்கின்றனர்

பாச உணர்வு இல்லா பாவிகள் 


மறுமை க்கான அடையாளம் இது

மனிதாபிமற்ற அரக்கர்களின் அராஜக அதிகரிப்பு இது

எனினும் காஸாணியர்கள் ஓயவில்லை


சிதைந்து கிடப்பவை அவர்களின் உடல்களே தவிர அவர்களின் 

ஈமான் அல்ல

துண்டாடப்பட்டு கிடைப்பவை அவர்களின் கைகால்களே தவிற 

அவர்களின் உறுதியுடனான நம்பிக்கை அல்ல


வலுவுடைய ஈமான், அவர்கள் தேசத்தின் மீது இருக்கும் பற்று 

அக்ஸாவிற்கான சுதந்திர வேட்கை

வெற்றி பெரும் வரை எதையும் இழப்போம் என்ற மனவுறுதி 

என்பன அவர்களை இயங்குகிறது


இரத்த பந்தங்களுக்காக நாமும் கரம் ஏந்திடுவோம்

ஸஹீத் நிலை அடைந்தவர்களுக்காக மன்றாடுவோம்

சுதந்திர காஸாக்காக பிராத்திடுவோம்.


Written By

A F Afra
Faculty of Arts (R), 1st Year
University of Colombo


No comments:

Post a Comment

இஸ்லாம் கூறும் தாவரவியல் விஞ்ஞானம்

தாவரவியல் பற்றி அறிவியல் உண்மைகள் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் பல விடயங்கள் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றன. இங்கே...