கடலினை நோக்கி பார்த்தவனாக அமர்ந்திருக்கிறான் அப்துல்லா. ஒரு இறையச்சம் உடைய வாலிபன். இக்கதையின் கதாநாயகன். ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து கிராமத்திலேயே படிக்கின்ற மாணவன். அவனுக்கென்று பல கனவுகளை சுமந்து கொண்டு படிக்கிறான். உயர்தர பரிட்சையில் 3A சித்தியினை மாவட்டத்தில் 3 இடத்தையும் பெறுகிறான். தான் கனவு காணும் கொழும்பு பல்கலைக்கழகத்தையும் கொழும்பு என்கின்ற அந்த நகர வாழ்க்கையும் பார்க்க வேண்டும் என்ற அவனின் அந்த பல நாள் கனவு நிஜமாகி அந்த தருணம் சொல்வது அறியாத திகைக்கிறான; அப்துல்லா.
பல்வேறுபட்ட குடும்ப சுமைகள் அப்துல்லாவுக்கு வாப்பாவோ பக்கவாதத்தினால் வீட்டிலே இருக்கின்றவர் .அப்துல்லாவின் உம்மாதான் வீட்டில் செய்கின்ற சிறிய உணவுகளை விற்று வரும் காசிதான் அவர்களின் குடும்பச் சுமையின் பக்க பலமாக இருந்தது. இதற்கு நடுவில் தந்தையின் மருத்துவ செலவுகள் தங்கச்சியின் படிப்புச் செலவு என பல சுமைகள் குடும்பத்தின் மூத்த மகன் என்ற வகையில் அப்துல்லாஹ் விடுமுறை தினங்களில் வேலைக்கு செல்வதும் வழக்கம்.
சிறிது காலம் செல்கின்றது. அவனுக்கு பல்கலைக்கழகத்திற்கான அழைப்பு கடிதம் அது. தான் கனவு காணும் இடத்தினை பார்க்க போகிறோம் என்ற எண்ணத்துடன் மகிழ்ச்சியில் இருக்கிறான். இன்னும் ஒரு பக்கம் கவலையில் இருக்கும் அவன் மனநிலை வீட்டிலேயே முதுமையின் பிடியிலும் நோய்வாய்ப்பற்றிருக்கும் வாப்பா, உம்மா படித்துக் கொண்டிருக்கும் தங்கச்சி தன் குடும்பத்தை விட்டு எப்படி பிரிந்து செல்வது என்ற எண்ணம் அவனுக்கு இதுவரைக்கும் குடும்பத்தையும்; விட்டு செல்லாத அப்துல்லாவுக்கு 325 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் கொழும்பு என்கின்ற நகரம் அவன் கண்களில் பலவிதமாக வந்து செல்கின்றது.
பல கனவுகளுடன் தனது பைகளுடனும் தனது உம்மா வருன்கின்ற வருமானத்தில் சேர்த்த பதினைந்தாயிரம் ரூபாய் பணத்துடன் கொழும்புக்குப் போக வேண்டும் என்று சொல்கிறான் அப்துல்லா. முதல் தடவையாக தனிமையே உணர்கிறான். பஸ்ஸின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தவனாக தன் குடும்பத்தின் வறுமையின் நிலை எண்ணுகிறான் அவனின் கண்கள் அவனை அறியாமலே கலங்குகின்றன. மறுக்கணம் தான் படித்து எப்படியாவது தனது குடும்பத்தினை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று அவனின் மனநிலை அவனை அவனே உறுதிப்படுத்திக் கொள்கிறான்.
அவனை அறியாமலே அப்துல்லா தூங்கி விடுகின்றான். திடீரென அவன் காதில் கொட்டுவ கொட்டுவ என்ற சத்தம் அவன் காதில் விழுகின்றது. முழித்துப் பார்க்கிறான் அதுதான் அவன் பார்க்க ஆசைப்பட்ட கொழும்பு நகரம் பரபரப்பாகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு மத்தியில் அப்துல்லாஹ் நிற்கிறான். விண்ணை தொடுகின்ற கட்டிடங்கள் அவனை பிரமிக்க வைக்கின்றன பல கனவுகளை தாங்கிய அவன் பைகளை எடுத்துக்கொண்டு அந்த பல்கலைக்கழக விடுதி என்ற மற்றுமொரு வாழ்க்கையை நோக்கி நகர்கிறான் அப்துல்லா. அதுதான் தனது நான்கு வருடத்திற்கான புதிய வீடு என்பதை உணர்கிறான்.
பல்கலைக்கழக விடுதியில் புதிய நண்பர்கள் பல கிடைக்கப்பெறுகின்றனர். அவர்களோ புதிய முகங்கள், இடங்களோ புதிய இடங்கள் சிலர் சிங்களத்திலும் கதைக்கின்றனர். அப்துல்லாவுக்கோ சிங்களம் தெரியாது. அவர்களிடம் கதைத்துக் கொண்டிருக்கும் போது அப்துல்லாவின் தொலைபேசியில் உம்மாவின் அழைப்பிதழ் அது உம்மாவின் குரல் கேட்கிறது. சலாம் கூறி ‘மகன் போய் சேர்ந்துட்டீங்களா’ என்ற சத்தம் சலாத்திற்கு பதில் கூறிய அப்துல்லா அல்லாஹ்வின;துணை வந்துட்டன; உம்மா இப்ப வாப்பாட சுகம் எப்படி இருக்கு தங்கச்சி எங்க என்று விசாரிக்கிறான் கொஞ்ச நேரம் கதைச்சிட்டு தூங்க சென்று விட்டான்.
அடுத்த நாள் அவனுடைய கனவு இடத்தினை நோக்கி நகர்கிறது. அவனின் பயணம் அதுதான் கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் முதலாம் இடத்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகம். அவனோடு தொலைபேசியில் கதைத்து நண்பன் ஆகிய உமைர் இணைகிறான். இருவரும் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.
அப்துல்லா பல்கலைக்கழகம் வருவதும் பின்னர் விடுதி செல்வதுமாக அவன் வாழ்க்கை நகர்ந்து கொண்டு செல்கிறது ஒரு இடத்தில் அவனுக்கு நகர வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது. சுவை இல்லாத உணவுகள்;; பல சுமைகள் தோல்விகள் என தனி ஒருவனாக அவற்றை சந்திக்கின்றான்;. அந்தப் பல்கலைக்கழக வாழ்க்கை அவனுக்கு கற்றுக் கொடுத்தது பல. ஒரு கட்டத்தில் தன் உம்மா சமைத்து தந்த அந்த உணவுகளையும் தன் பள்ளி நண்பர்களையும் அவர்களின் நினைவுகளையும் எண்ணி பார்க்கின்றான் அப்துல்லா.ஆனால் அவன் குறிக்கோள் ஒன்று மட்டும்தான் தன் குடும்பத்தின் வறுமை எப்படியாவது இல்லாமல் செய்ய வேண்டும் என்பது. இவ்வாறுதான் அப்துல்லாவின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது அந்த நகரத்தில்
அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் அப்துல்லாவின் வாழ்க்கை………………
தொடரும் ……. கனவுகளை சுமந்த பல்கலைக்கழக வாழ்க்கை ….

