Thursday, April 3, 2025

கவியால் பாடு கழகத்தை

கலை தந்த கவி

இன்று கலையின் புகழ் சொல்ல 

கவிதை எனும் மடலேந்தி

களிப்புடன் சொல்கிறது இங்கே,


நிறைவான ஆசையினால்

நிதம் பல காத தூரம் தாண்டி

பல் கலை கற்க வந்த

பக்குவமானர் நாம்..


மேல் படிப்பு மட்டுமல்லாது, 

மேலான குணங்களையும்

மேதைகளின் மகிமைகளையும்

மெய்சாற்றிடும் இடமிது!!


"பங்கேற்கும் நிகழ்வுதனில்

பரிசிலினையும் பெற

பயிற்சி கொடுக்கும் இடம் இது தானோ" என வியக்க வைக்கிறது எம்மை...


தேன் குடிக்கும் வண்டுகளை

பூவின் மணம் பாராது

பாரபட்சம் ஏதுமின்றி

பாரினிவே உள்ள அனைத்து மலர்களிலும் உண்ணும் விந்தை போல் -

பல பாகங்களிலும் சிதறிய எம்மை ஒன்று சேர்த்த இடமிது..


கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன்

முறையான ஓர் வாழ்வை வாழ

பயிற்றுவிக்கும் கழகம் இது..


ஆண்டாண்டு தோறும் அழகாய் பூத்து

ஜொலிக்கும் மரங்களாய்

ஆண்டுக்கொருமுறை புதிய பட்டதாரிகளை கொண்டு ஜொலிக்கிறது//


நவீன காலத்திற்கு ஏற்ற கல்வியை நபிகளாரின் முறை தவறாது நன்றாக ஊட்டி நல்வழிப்படுத்தும்

எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக வாழ வழிப்படுத்தும் சாலையோ!!


அமைதியான வாழ்க்கைக்கு ஆரம்பபுள்ளியோ, இக்கழகம்!!

அண்ணலார் வழிநடத்திய மதீனத்து சமூதாயத்தை போன்று இன மத மொழி பாராது அனைவரும் சமவுரிமை கொடுத்து பல்கலாச்சார சமூகத்தை பறைசாற்றும் கழகம் இது..


முதலாண்டில் கலங்கி நின்றவருக்கு களம் அமைந்து கொடுத்து

முடிவாண்டில் அவரின் முன்னேற்றத்தை பாராட்டி கதை சொல்லியது..


தாய்மடி தந்த ஆறுதலை

இறையுணர்வு கொண்ட நேச தோழர்களின் வழியே தந்து

வளரவிட்டு வாகை தந்து வாழ்ந்து பாடி வழிகாட்டிய சாலையே இப்பல்கலைக்கழகம்!!...


A.F.Afra

1st Year

Faculty of Arts 

University of Colombo

No comments:

Post a Comment

இஸ்லாம் கூறும் தாவரவியல் விஞ்ஞானம்

தாவரவியல் பற்றி அறிவியல் உண்மைகள் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் பல விடயங்கள் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றன. இங்கே...