Wednesday, April 16, 2025

நடந்தவைக்கு நன்றிகள்!!!!!

வாழ்க்கை ஒரு மனிதனுக்கு முடிவில் பல அனுபவங்களை கொடுத்து விடுகின்றது. இவை ஆயுள் நீளமாக உள்ளவருக்கு மட்டுமல்ல கொஞ்சநாள் எனினும் சரியாக பயன்படுத்துபவருக்கே கிடைக்கின்றன. அனுபவம் என்பது தேடிப் பெற வேண்டியவை என பலர் கருதுகின்றனர் ஆனால் சில நேரங்களில் அது தேடாத சிலருக்கும் சிறப்பாக அமைந்து விடுகின்றது. அவளும் பத்துடன் பதினொன்றாக பிறந்து வளர்ந்தவள் தான்! இறைவனை மட்டுமே நம்பி வாழும் ஒருவள்.

13 வருட கல்வியின் பின்னர் கிடைக்கும் நான்கு வருட வாழ்க்கை என்ன பெரிதாக செய்து விடப் போகிறது என்ற எண்ணத்திலேயே அடுத்த அடியையும் பல்கலைக்கழகத்திற்கு எடுத்து வைத்தவள்.

வாழ்க்கையில் அழகான சந்தர்ப்பங்களை சில கசப்பான அலுபவங்கள் தான் உருவாக்கி அதுபோலத்தான் அவளுக்கும்..எதையும் விடுகின்றன. தனியாகவும் துணிவாகவும் கையாள வாழ்க்கை அவளுக்கு கொடுத்த ஒரு நல்ல ஆயுதம் "அனுபவம்"

அன்று பல்கலைக்கழக வாசலில் பெற்றோர் கையில் இருந்து தன் கையை எடுத்த பிறகு திக்கத்தடுமாறிய அவள் துணிவு

எங்கே செல்வது தெரியாது அசைய மறுத்த கால்கள், தெரியாத மொழியை பேசத் தடுமாறிய வாய், தெரிந்த போதும் வெளியே வராத தாய்மொழி, வாய்ப்புக்கள் குவிந்த போதும் முறை தவறி செய்து விடுவோமோ என்று செய்யத்தவறிய சரிகள், அன்னியமாய் தெரிந்த அடுத்தவர் புன்னகை, தனியாய் நின்று போராட தடுத்த சொந்த மனம் என பல குறைகள் தன்னை எச்சரிக்க கண்டாள்....!

எத்தனையோ வைத்துக் கொண்டு அடுத்த கட்டம் செல்ல அவளுக்கு கை கொடுத்தது என்னவோ அனுபவம் தான்?

காலச்சக்கரம் வருடங்களை சுழற்றவே தடுமாற்றங்கள் தடம் மாறின! அந்நியமாய் தெரிந்த அடுத்தவர்கள் நண்பர்களாய் உருவெடுத்தனர்! தெரியாத நகரம் வழமையான வதிவிடம் ஆகியது! தவறுகள் சரி செய்யப்படுகின்றன.

எதிர்த்து நிற்க தயங்குகின்ற பயத்துக்கும் தடுமாற்றத்துக்கும் மத்தியில் போராடிய அவளுடைய சிறிய இதயம் எனதே!!!

இத்தனை திருத்தத்துக்கும் காரணமானது சூழ்நிலையோ காலமாகவோ இருக்கலாம்.. ஆனால் நான் நன்றி சொல்ல விரும்புவது என்னவோ அல்லாஹ்விற்கும் என்னை கடந்து சென்ற சில கசப்பான அனுபவங்களுக்குமே!! அல்லும்துலில்லாஹ்!!!!!!!

Written By

M I F IMASHA
Faculty of Arts (R), 3rd Year
University of Colombo


No comments:

Post a Comment

இஸ்லாம் கூறும் தாவரவியல் விஞ்ஞானம்

தாவரவியல் பற்றி அறிவியல் உண்மைகள் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் பல விடயங்கள் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றன. இங்கே...