Saturday, April 5, 2025

நோன்பு தரும் மாண்பு

ரமலான் மாதம் புனிதத்துவம் மிக்க மாதமாக திகழ்வது போல அம்மாதத்தில் நோற்கப்படுகின்ற நோன்பும் சிறப்புக்குரிய இபாதவாக அமைதிருகின்றது.

ஸவ்ம் எனும் பதம் 'ஸ்வாம்' எனும் அறபு பதத்திலிருந்து தோன்றியதாகும். தவிர்ந்து கொள்ளுதல் எனும் மொழி கருத்தை இது தருகிறது உணவு, பானம், பாவம் என்பவற்றைத் தவிர்த்தல் என்ற கருத்துக் கொள்ளலாம்.

இஸ்லாத்தின் பார்வையில் இதற்கு பின்வரும் கருத்து கொடுக்கப்படுகின்றது. 'நோன்பு கடமையாகும் ஒரு முஸ்லிம் தான் இறை திருப்தியை நாடி நோன்பிருக்கின்றேன் எனும் எண்ணத்துடன் பஜர் உதயமாகியது தொட்டு சூரியன் மறையும் வரை நோன்பை முறிக்கும் கருமங்களைத் தவிர்ந்து வாழுதல்.

நோன்பு நோற்றவர் ஆன்மீக ரீதியிலும் லௌகீக ரீதிலும் அதிக பயன்படுகளை பெற்றுக் கொள்வார். அதாவது அவருக்கு மேலும் மறுமையிலும் பல்வேறு வகையான பயன்கள் நோன்பினை நோற்பதன் மூலம் அவர் பெற்றுக் கொள்கின்றார். அவற்றில் ஆன்மீக ரீதியாகவும், இவ் உலகில் பெற்றுக்கொள்ள கூடிய பயன்கள் லௌகீகரீதியாகவும் காணப்படுகின்றன. நாம் அவற்றை நோக்கலாம்.

ஆன்மீகப் பயன்பாடுகள்

1.நோன்பு ஈமான் இறையச்சத்தை ஏற்படுத்துகின்றது.

ஈமான் கொண்டவர்களுக்கு நோன்பு ஒரு கேடயமாக அமைந்துள்ளது. இறையச்சத்தை அதாவது உளத்தூய்மையை வளர்த்து விடுகின்றது. இறையச்சம் நோன்பின் பிரதான குறிக்கோளாக அமைந்துள்ளது.

"விசுவாசிகளே நீங்கள் இறையச்சம் பெறலாம் என்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது வித்தியாக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது." (அல்குர்ஆன்)

2. சுவர்க்கம் நுழையும் பாக்கியம் பெறல்.

அதாவது இறைவணக்கங்களின் ஈடுபாடு அதிகரிக்கும். நன்மைகள் புரிவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றன. 'ஒவ்வொன்றுக்கும் ஒரு வாயில் உண்டு. வணக்கத்தின் வாயில் நோன்பாகும்" (ஹதீஸ்) நோன்பு நோற்பதன் மூலம் ரமலானில் சுவர்க்கவாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகம் மூடப்படுகின்றன. சைத்தான் விலங்கிடப்படுகின்றான்.

நோன்பு நோற்பதன் மூலம் நோன்பாளிகளுக்கு என்று தயாரிக்கப்பட்ட ரய்யான் எனும் வாயிலின் ஊடாக சொர்க்கம் நுழையும் பாக்கியத்தை பெறலாம்.

3. பாவங்களை மன்னிப்பதற்குரிய சந்தர்ப்பமாக அமைதல்

பொதுவாகவே ரமலான் நாட்களில் பாவமன்னிப்பு அதிகம் இடம் பெறும் "யார் ஈமானுடனும் உள்ளச்சத்துடனும் நோன்பு நோற்கிறாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். (ஹதீஸ்)

4. உடல் மட்டுமல்லாது உள்ளமும் நோன்பிருக்கிறது.

உடல் உறுப்புகளான வாய், கண், காது, கை, கால் அனைத்தும் நோன்பிருக்கையில் ஆன்மீக உணர்வுகள் வளர்ச்சி அடைகின்றன. அதாவது கோபம், பொய், புறம்,இழி செயல்கள் யாவும் தவிர்க்கப்படுகின்றன

"நோன்பு பிடிப்பவர் பலர் பசியுடனும் தாகத்துடனும் இருப்பவர்களாவே நின்று விடுகின்றனர். விலக்கப்பட்டதைச் செய்து நோன்பு முடித்துக் கொள்கின்றனர். ஆகுமான உணவுஉண்பதை நிறுத்தி மனித உணைப் புசிக்கின்றனர். புறம் பேசுவது மனித உணைப் புசிப்பத்தாக்கும் (ஹதீஸ்)

5. அல்லாஹ்வுக்கு அடியார்களுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்தும்.

நோன்பு இறைவனது திருப் பொருத்தத்தை நாடி மட்டுமே புரியப்படுகின்ற வணக்கமாகும் முகஸ்துதி, பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் இதில் காணப்படுவதில்லை. ஆகவே அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் (ஹதீஸ் குத்ஸி) 

6. நோன்பு நோற்ற மனிதனுக்காக மறுமையில் நோன்பு மன்றாடும்.

அவ்லாஹ்வுக்காக யார் ஒருநாள் நோன்பு நோற்கிறாரோ அவரது முகத்தை அல்லாஹ் 70 வருடங்கள் தூரமாக்கி விடுன்றான்.

"நோன்பும்.அல்குர்ஆனும் மறுமை நாளில் மன்றாடும்."(ஹதீஸ்)

7. நன்மைகளை அதிகரித்துக் கொள்ள வாய்ப்புகள் காணப்படுதல்.

பாவங்களில் இருந்து பாதுகாக்கும் கேடயமாக நோன்பு காணப்படுகின்றது. வைவதுல் கதிரின் மகத்துவம் நரகவிடுதலை, ஸதகா, பொறுமை என்பவற்றில் மலக்குகளுக்கு நெருங்கிய தரத்தை நோன்பாளி அடைகின்றமை.

"யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ,தாசித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத்தேவையில்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி)நூல்: புகாரி 1903.(ஹதீஸ்)

லைலத்துல் கதர் எனும் இரவை எதிர்பார்த்துசெய்யும் போது அதிக அமல்களின் நன்மைகளை ஈட்டிக் கொள்ள முடிகிறது.

லௌகீகப் பயன்கள் / உலகியல் பயன்கள்

1. அன்பு சகோதரத்துவ உணர்வு வளர்தல்.

சமூகத்தை புரிந்து கொள்ளவும், பராமரிக்கவும் பழக்கப்பட்டு வருகின்றது.ஏழைகளோடு அன்பும், கருணையுடனும் இணைந்திருக்க செய்கின்றது சகோதரத்துவம், சமூக உணர்வு, ஒற்றுமை, மனிதநேயம், சமத்துவ பண்பு போன்றவற்றை வளர்க்கின்றது.

"நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள் வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்" (ஹதீஸ்)

2. தனிதமனித சமூக பொருளாதார மேம்பாடு ஏற்படும்.

வருமானத்துக்கேற்ப செலவு செய்யப் பழக்கப்படுத்திக் கொள்கையில் தனிமனித, குடும்ப பொருளாதார மேம்பாடு உருவாகின்றது. தனிமனித சேமிப்பு உலக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமைகின்றது. வீண்விரயம் தவிர்த்து சிக்கனமான வாழ வழிகாட்டுகின்றது.

3. குர்ஆன் கூறும் சமூக அரசியல் வாழ்வு மலர்ந்து காணப்படும்.

ஷஹ்ருல் குர்ஆன் என்பதனால் குர்ஆனுடன் தொடர்பு அதிகரிக்கின்றது. இது மாபெரும் சமூக மாற்றத்திற்கு காரணமாகின்றது அல்குர்ஆனை ஓதுவதால் மன அமைதி கிடைப்பதோடு ஞாபகசக்தி அதிகரிக்கிறது.

4. ஆரோக்கிய வாழ்வு கிடைக்கின்றது.

ஒரு மாத கால நோன்பு உடலின் பெளதீக நிலையை சீர் பெற காரணமாகின்றது.

"நோன்பு நோற்பபீர்களாக ஆரோக்கியவான்களாக மாறுவீர்கள்" (ஹதீஸ்)

உடலின் எடை குறைவடையும், பலவித நிவாரணமாக நோன்பு விளங்குகின்றது.

நோன்பு நோற்பதனால் உடலியல் எனும் physiological ரீதியான நன்மைகளான இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுதல், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் குறைதல் மற்றும் இரத்த அழுத்தம் குறைதல் ஆகியவை ஏற்படுகிறது. 1994 ஆம் ஆண்டு மொரோக்கோ தலைநகரில் நடந்த "ஆரோக்கியமும் ரமலானும்' என்ற தலைப்பில் முதல் சர்வதேச கூட்டமைப்பு அமர்வில் 50 ஆராய்ச்சி படைப்புகளை

சமர்ப்பித்தனர். எல்லா ஆய்வுகளும் ரமலான் நோன்பால் பல மருத்துவ நோய்களின் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இருந்தது.

5. கூட்டுக் கடமையாக காணப்படுகின்றது.

சர்வதேச முஸ்லிம் சமூகமும் நோன்பு இருக்கிறது. நோன்பின் சகல பயன்பாடுகளையும் சகலரும் பெற்றுக் கொள்ளும் நிலை உருவாகின்றது.

7. சுயக் கட்டுப்பாட்டை நோன்பு ஏற்படுத்துகின்றது.

அதாவது ஒவ்வொரு மனிதனும் தன்னை சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்திக கொள்வதற்கு நோன்பு உதவுகின்றது. கட்டுப்பாடான வாழ்க்கை பயிற்சியை தருகின்றது. தான் எவ்வாறு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்பதனை நோன்பு உணர்த்துகின்றது. அத்தோடு குற்றச் செயல்கள் குறைவடைகின்றது தன்னை கட்டுப்படுத்தி குற்ற செயல்களை தவிர்ந்து கொள்ள உதவிகின்றது.

8. பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் வளர்க்கின்றது.

நோன்பிருப்பதன் மூலம் தான் உண்ணாமலும் பருகாமலும் அல்லாஹ் அங்கீகரிக்கப்பட்ட விடயங்களை மேற்கொள்ளாமலும் இருப்பதன் மூலம் பொறுமையை உண்டாக்குகின்றது.அத்தோடு குற்றச் செயல்களில் இருந்து தன்னை பாதுகாத்து தனக்கு பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் வளர்க்கின்றது. 'எல்லா பொருட்களுக்கும் ஸகாத் உண்டு. உடலின் ஸகாத் உண்டு உடலின் ஸகாத் நோன்பாகும். நோன்பு பொறுமையின் அரைவாசியாகும். (ஹதீஸ்)

இது மட்டுமல்ல இன்னும் பல நன்மைகள் காணப்படுக்கின்றன. இவ் ரமலான் மாதத்தில் உச்ச நன்மைகளை பெறக்கூடிய வகையில் அல்லாஹ்வுக்கு ஈடேற்றமானதாகவும் ஈருலகத்துக்கும் நன்மை பெறக்கூடியதாகவும் எமது வாழ்க்கையை அமைக்க வேண்டும்.

Written By

M M F Sasna
Faculty of Arts (R)
University of Colombo




No comments:

Post a Comment

இஸ்லாம் கூறும் தாவரவியல் விஞ்ஞானம்

தாவரவியல் பற்றி அறிவியல் உண்மைகள் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் பல விடயங்கள் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றன. இங்கே...