Monday, July 14, 2025

அவள்


உயிர் தந்தவள் காலடியில் சுவர்க்கம் கொண்டவள்

உடன் பிறந்து மார்பில் சீராட்டியவள்

உன் உயிராய் பிறந்து "தந்தை" எனும் ஸ்தானம் தந்தவள்

உனக்காய் பிறந்து, உன் உடையானவள் - பின்

தோழியாகி யாரும் தரா தோல் தந்தவள்...


அத்தனையுமானவள் ஏனோ, யாரோ எனும் நிலையில் இச்சை பொருளாகிறாளே...


பார்வையை தாழ்த்து என்பது பெண்சாதி கட்டளை மட்டுமா தோழா...


பெண்ணை போதிக்கும் போதனையில்

நூற்றில் ஒன்றாயினும், உன் மகனுக்கும் கூறு தாயே... ஒழுக்கம் யாராயினும் ஒன்றே


பெண்ணை விட

அறிவு அதிகம்

ஆற்றல் அதிகம்


வலிமை அதிகம், துணிச்சல் அதிகம்


இதய அளவு அதிகம்

மூளை அளவும் அதிகம்


உலகின் ஆதாரமாம் குடும்பம் சுமக்கும் பொறுப்பும் அதிகம்


அது ஏனோ மங்கைக்கு மட்டும்

எதையும் தாங்கும் இதயமாம் மென்மை அதிகம்... 

வலிகளைச் சுமக்கவோ, மறைக்கவோ இறைவா...!


பாலூட்டுவதிலிருந்து பதியை அடையும் வரை

இரு தரப்பு சம உரிமை காக்கிறது மார்க்கம்....

பெண் படிப்பை கூட மட்டுப்படுதும் சமூகம்....

எங்கு சென்றுரைப்பது


அவளை கொண்டாட தேவையில்லை மாறாக

திண்டாட வைக்காத பார்வை போதும்...

இறுதி உரையில் கூட எம் பெண்ணை பத்திரமாக பார்த்துக்கொள்ள கூறிய பெருமானார் அளித்த பொறுப்பு நினைவுள்ளதா நண்பா...


உடன் பிறப்பவளின் மேல் தூசு தீண்ட விடா

உள்ளம் 

ஏனோ துச்ச பார்வையை வீசுகிறது

உடையவளல்லா அவள் மேல்...


இலக்கை அடைய சிட்டாய் பறந்து,

இன்னல் பல கடந்து

தொலைதூரம் நோக்கிப் பயணித்தாள்...

தடைகள் பல தைரியமாய் தகர்த்தவள்

அவன் கழுகுப் பார்வையை தகர்த்த இயலவில்லையே இறைவா,

உள்ளம் குமுறுகிறது...


தோழா...

எவ்வாறு வேண்டுமானாலும் வாழ்ந்துகொள்

ஒரு நாள் மாண்டிடுவாய் எனும் எண்ணத்தில்...


இழைக்கும் குற்றம் யாரும் அறியவில்லை என ஏண்ணுகிறாயா...

விழி இன்றி பார்ப்பவன் எல்லாப் பொருள் மீதும் ஆற்றல் உடையவன்,

அவனை மறந்தாயோ...?


வெளிக்கோணற முடியா வலிகள் பல கூறின்;

முள் மேல் சேலை விழுந்தாலென்ன,

சேலை மேல் முள் விழுந்தாலென்ன?

பஞ்சமில்லா கருத்து...


வாய் மூடி இருப்பின்:

அடிமேல் அடி

பார்க்கும் பலரோ,

கேட்கக்கூடும் பெண்ணியம் பேசுகிறாயோ?


இல்லை தோழா — இது கண்ணியம்...


மன்னரை காத்து கிடக்கிறது...


மீண்டும் எழுப்பப்படும், அப்போது

மீழ வாய்ப்பை கேட்பாயா, கேட்கத்தான் முடியுமா...

"எம் பெண்களை நோகடித்து கண்ணீர் சிந்தச் செய்பவருக்கு எதிராக

நியாயத்தீர்ப்பு நாளில் நான் இருப்பேன்" என்ற

எம் நபியின் வாக்கை மறந்தாயோ தோழா...?


பெண் ஆணுக்கு சோதனையாக அனுப்பப்பட்டவள் —

சொகுசுப் பொருளாய் அல்ல!


எவனிடமிருந்து வந்தோமோ,

அவனிடமே மீள வேண்டுமென நினைவில் கொள்...


உனக்கான நற்செய்தி அவள்

நசிக்கிடாதே தோழா.....


சூர் ஊதும் முன் விழி.....


Written By

A F Sithara

Faculty of Technology(R), 3rd Year

University of Colombo

No comments:

Post a Comment

இஸ்லாம் கூறும் தாவரவியல் விஞ்ஞானம்

தாவரவியல் பற்றி அறிவியல் உண்மைகள் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் பல விடயங்கள் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றன. இங்கே...