Sunday, July 27, 2025

உடல் ஓர் போர் மண்டலம்



தினம் ஒரு போராட்டம் அல்ல 

தினம்தோறும் போராட்டம் தான்

தினமும் போராடும் ஆன்மா நான் 

பாதுகாப்பின்மை எதிராகப் போராட்டம் தான் 


அச்சுறுத்தலுக்கு எதிராக போராடும் நான் 

கடந்த கால தவறுகளுக்கு இன்றும் போராட்டம் தான்


நிகழ்காலம் என்னை முடக்குகிறது 

எதிர்காலம் என்னை மூழ்கடிக்கிறது


பல வேளை உறவுகள் என் எண்ணத்திற்கு திரை விரிக்கிறது

சிலவேளை நட்பின் கரங்கள் கொஞ்சம் தூரம் நிற்கிறது 


பகையாகி விடுவோமோ எனும் பயம் என்னை அச்சுறுத்துகிறது

இதயம் இதை எதிர்த்து நிதம் போராடுகிறது


சிலநேரம் தீவிர போரில் நான்

இதைய எண்ணங்கள் அந்நேரம் வெறும் சாம்பல் தான்


சுககல்வியை சுமையாகும் நான்

கோட்டை உள்ளம் வெறும் தரை மட்டும் தான்


உளப் போராட்டத்தில் ஊமையாகும் நான் 

உலரும்  இருளில் சரணடைகிறேன்

என் போருடன் போர் புரிகிறேன்


நான் அறியா என் உடல்- தினம் பில்லியன் பிற பொருளுடன் போர் செய்கிறது


தீயவைகளை அகற்ற தினம் புது தந்திரத்தை பயன்படுத்துகிறது 

ஒரு சில கலங்கள் இறக்க 

மறு சில கலங்களை புதுப்பிக்கிறது


நான் நினைத்த என் உடல் சடலம்

தினம் ஓர் போர் மண்டலம் 

தோல்வியை ஏற்கா தோழமை கலங்களின் தளம்


முன்னேற்ற பாதையில் உதாரணம் மிக்க வளம்

உள்ளே இருப்பவை ஊமை ஆயினும் எனக்காய் தினம் உயிர் காக்கிறது 


படைப்பில் ஒவ்வொன்றும் வியப்பை ஏற்படுத்துகிறது 

வெளியில் வாழ்க்கை தினம் சவால் கொடுக்கிறது


எதிரிக்கு எதிராக போராட துடிக்கும் நான் 

துளியும் சிந்திக்காது கொடிய நோய்களுக்கு எதிராக தினமும் உள் போராட்டம் தான்


தினம் நான் கேட்கா கட்டளை என்னுள்

நிணநீர்குளியுங்கள் ஒற்றை குளியுங்கள்கள்  மற்றும் புரதங்கள்

இவளை உயிருடன் வைத்திருக்க போர் புரியுங்கள்


அடக்க நினைக்கும் சவால் போருக்கு எதிராக அடிமைப்பட்டு 

அகம் இருக்கும் அதிசய போருக்கு துரோகம் செய்கிறோம்


கண்ணுக்குத் தெரியும் துட்ச்சப்போரை நான் ஏன் கைவிட வேண்டும்

கண் அறியா கொடியவை எதிர்த்து எனக்காய் என் உடல் தினம் போராடும் போது


Written By

M. H. Sarah

faculty of Indigenous Medicine(R), 5th Year

University of Colombo


No comments:

Post a Comment

இஸ்லாம் கூறும் தாவரவியல் விஞ்ஞானம்

தாவரவியல் பற்றி அறிவியல் உண்மைகள் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் பல விடயங்கள் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றன. இங்கே...