காவியால் சூழ்ந்த நெஞ்சை கவிதை போல் வெண்மையாக்கி,சாவியாய் தொழுகை தந்த சத்திய புருஷர் நாமம்,நாவினால் நவின்றால் கூட நரம்பெல்லாம் கலிமா சொல்லும் لا إله الله محمد الرسول الله
எல்லா புகழும் நம் ஓரிறைவன் அல்லாஹ்வுக்கே الحمدلله
திரு நபியின் தினசரி வாழ்வை நினைக்கையில் நெஞ்சினுள் ஏதோ ஒரு தித்திப்பு.
தன் பிறப்பின் முன்னே தன் தந்தையை இழந்து பிறந்து இஸ்லாத்தின் தந்தையானவர்.
சிறு பிராயத்திலேயே தன் தாயை இழந்து சிதறிக்கிடந்த சமூகத்தை சீரிய பாதையில் சீரமைத்தவர்
எல்லையற்ற பேரன்பின் சொந்தக்காரர். கோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்திற்கு இடமின்றி இடம் பித்து மனதை கொல்லை கொண்டவர்.
வறுமை பூ தன் வாழ்வில் பூத்த போதும் வயிற்றினிலே கல் சுமந்து பிறர் துயர் துடைத்தவர்.
நெரிகெட்ட காபிர்கள் மக்காவெங்கும் நெருப்போடு இணைவைத்து வணங்கும் வேலை,புரியாத பேதைகள் நபிகளார் நெஞ்சை புண்ணாக்கி பழியுரைகள் கூறும் வேலை, அறியாமை இருள் விளக மார்க்கத்தை அண்ணலாரே தன் பொறுமை தளிரச்செய்தார்.
மன்னவனின் தூதை ஏந்தி வந்த மேதை இவ்வுலகில் எம்மதமும் கொண்டிராத இப்புனித வேதத்தை பெற்று எமக்காய் விட்டுச்சென்றவர், இத் தர்மமே இவர் காட்டித்தந்த பாதை.
இவர் வார்த்தையில் ஒரு போதும் மாற்றமில்லை அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கை மீது ஒரு துளியும் சந்தேகம் இல்லை.
அவர் கிடைக்க நம் மதம் மட்டுமல்ல எம்மதமும் தவமிருந்து இருக்கிறோம் என்பதே மறைமுக உண்மை.
அவர் வாழ்வை வர்ணிக்க வார்த்தையற்றவர்களாக நானும் என் பேனாவும்.....
Written By
Sadheeka Abuthahir
Faculty of Technology(R), 2nd Year
University of Colombo

No comments:
Post a Comment