18 ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு உலகம் தன்னுடைய பொக்கிஷங்களை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டது....
புதிய மூலக்கூறுகளை கண்டறிதல் கனிம வளங்களை கண்டறிதல் புதிய புதிய பிரச்சினைகள் தீர்க்கும் கணித சூத்திரங்களை கண்டறிதல் என மனிதன் தேடுதல் வேட்டையில் இறங்கினான்...
பல அரசியல் குழப்பங்கள்;
இரு மாபெரும் போர்கள்;
ஏன் அனுவாயிதத்தையும் ஒரு இனக் குழு சுவைத்து விட்டது..
20 ஆம் நூற்றாண்டு எப்படி?
ஆம் உலகம் புதிய உலக கட்டளையின் கீழ் வந்து விட்டது....
புதிய நாடுகள் புதிய எல்லைகள் புதிய கொள்கைகள்....
புதிய தேசிய பாடல்கள்..
ஐக்கிய நாடுகள் சபை என
மனிதர்கள் ஒன்று பட்டு வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்....
எல்லா துறைகளும் போட்டி போட்டு வளர ஆரம்பிக்கின்றன.....
மனிதனுக்கு ஒரு ஆசை இருக்கிறது...
தான் நினைத்தது கண் முன்னே நடக்க வேண்டும்....
அந்த அளவு முன்னேற்றம் வந்து விட்டதா???
ஆம் மனிதன் வந்து விட்டான்....
அவன் வாழும் வீடுகளை சுவர்கம் போல் அமைக்க நினைக்கிறான்...
அவன் உள்ளே வருவதை அறிந்து கதவுகள் தானாக திறக்கின்றன...
உள்ளே வெளிச்சம் பரவுகிறது...
வெப்பநிலை அவன் உடலுக்கு ஏற்றாற் போல் மாறுகிறது..... இன்னும் பல...
ஆம் மனிதன் அந்த நிலையை எட்டி விட்டான்....
எல்லா துறைகளும் Automation and autonomous என்ற வார்த்தைகளுக்குள் வளர்ச்சியை தேடுகிறது....
கண்காணிப்பவனே மனிதன்...
விடாது உழைப்பவை இயந்திரங்கள்.....
யார் இந்த மனிதன்??
இந்த மனித வர்க்கத்தின் வரலாறு என்ன?
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ
நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
(அல்குர்ஆன் : 23:12)
அல்லாஹ் மனிதனை மண்ணில் இருந்து படைத்தான் பின்
ثُمَّ سَوّٰٮهُ وَنَفَخَ فِيْهِ مِنْ رُّوْحِهٖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـــِٕدَةَ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ
பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.
(அல்குர்ஆன் : 32:9)
இவ்வாறு அல்லாஹ் அவன் ரூஹிலிருந்து மனிதனுக்கு ஊதினான்...
அதன் தாற்பெரியம் ;
மனித உடலை வைத்து வைத்தியத்துறையில் 70 ற்கும் மேற்பட்ட பிரிவுகளும் நிபுணர்களும் இருக்கிறார்கள்...
மனிதனின் ஒவ்வொரு அங்கமும் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறிந்து விட முயற்சி செய்கிறார்கள்....
பெரும்பாலானவை வெற்றிதான்....
இவ்வளவு சிந்தித்து வெற்றி கொடுத்த மூளை எவ்வாறு வேலை செய்கிறது??
முழுமையாக அறிந்து விட
முடியவில்லை...
பெரிய ஒலியை காது கேட்க அங்கே கண் பார்க்க முழு உடலும் அபாயத்தை உணர்ந்து அதற்கு தகுந்தால் போல் எதிர்வினை ஆற்றுகிறது கணப்பொழுதில்.....
புலன்களை ஒருங்கினைத்து மின் சைகைகளை வழங்கி கட்டுப்படுத்தியது மூளை....
இவ்வாறு மனிதன் மூளையின் செயற்பாட்டை கண்டறிய முயற்சி செய்த பலன்.......
உலகம் இயந்திரக் கற்றல் எனும் மைல் கல்லை எட்டி விட்டது....
மனிதன் இன்னொரு மனிதனுடன் பேசுகிறான்....
இது சாதாரண விடயம் தானே....
ஆனால் எவ்வாறு?
மனிதன் அவன் கேட்கும் ஒவ்வொரு சொற்களையும் மூளை நியூரோன்கள் தொடர்புபடுத்தி அர்த்தம் கொள்ள அவன் ஆத்மா புரிந்து உரையாடுகிறது......
கண் பார்கும் பொருட்களை மூளை புரிந்து கொள்கிறது.....
அவன் குழந்தைமாக இருந்ததில் இருந்து ஆடு இவ்வாறுதான் இருக்கும் என்று பல ஆடுகளின் வடிவங்களை பார்க்கிறான்....
ஒரு புதிய வகை ஆட்டை அவன் பார்த்தாலும் இது ஆடுதான் என்று அவன் நியூரல் வலையமைப்பு வேலை செய்கிறது
மூளையில் நடக்கும் இந்த தகவல் பரிமாற்றம் மிக சிக்கலான வலையமைப்பைக் கொண்டது....
மனிதனால் இவை அனைத்தையும் புரிந்து கொள்ள இயலவில்லை தான்.....
மனிதன் மூளை இயல்பாகவே பொருட்களின் பெயர்களையும் அதன் இயல்புகளையும் கற்றுக் கொள்ளும் திறனுடன் வடிவமைப்பு நிரலால் எழுதப் பட்டுள்ளது....
وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ اَنْبِـــٴُـوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
(அல்குர்ஆன் : 2:31)
இவ்வாறு மனிதன் இறைவன் வடிவமைப்பால் புதிதாக கற்றுக் கொள்ளும் திறனுடன் பிறக்கிறான்.....
ஆகவே அவன் நுண்ணறிவு பெற்றவனாக கருதப் படுகிறான்....
இந்த நுண்ணறிவு உலகில் வேறு எந்த உயிரினதிற்கும் இல்லை என்பதே உண்மை..... ஜின்களை தவிர....
தூக்கனாங்குருவி அதை மனிதன் அறிந்த காலம் முதல் அது வீடு கட்டும் முறை ஒன்றுதான்....
ஆனால் மனிதன் வீடு கட்டும் முறை எவ்வாறு வளர்ச்சி பெருகிறது....
இது ஒரு சிறிய உதாரணம் தான்
அவன் புதிதாக கற்றுக் கொள்ளும் உயிரினம்....
ஆகவேதான் உலகை ஆள்கிறான்....
எல்லா பொருட்களும் எல்லா உயிரினங்களும் கடலும் மலையும்
காலநிலையும் அவனுக்கு கட்டுப்பட்டு நடக்க
முயல்கிறது....
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
(அல்குர்ஆன் : 2:30)
உண்மையிலே எல்லா படைப்புகளும் படைப்பாளன் இறைவனுக்கே கட்டுப்படுகிறது...
இறைவனின் பிரதிநிதிகளே மனிதர்கள்....
இறைவனே அரசன்....
இறை ஆணைப்படி உலகை நிர்வாகம் செய்வதே மனித கடமை....
ஆகவே தான் இறை கட்டளைப்படி உலகம் மனிதர்களுக்கு கட்டுப்படுகிறது....
ஆனால் இபீலீசையும் அவன் கூட்டத் தாரையும் தவிர...
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّاۤ اِبْلِيْسَ اَبٰى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் கட்டுப்படுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
(அல்குர்ஆன் : 2:34)
இப்லீஸ் மனிதர்களை வழி கெடுக்க சபதம் செய்தான்.... அதை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறான்......
இதுதான் மிகப் பெரிய அரசியல் பிரச்சினை....
உலக கட்டுப்பாடுபம் அதிகாரமும் செல்வங்களும் இப்லீஸ் தன் வயம் இருக்க விரும்பினான்....
அதற்காகவே பல ஆயிரம் ஆண்டுகளாக தவம் இருந்தான்..
அவன் நயவஞ்சகம் இறைவன் அறிந்தான்...
அவனை சோதனையில் ஆழ்த்தி விட்டான் இறைவன்...
ஆனால் மனிதர்களையும் அதே சோதனையில் ஆழ்த்த இப்லீஸை இறைவன் இன்னும் விட்டு வைத்து இருக்கிறான்......
அது உலக இறுதி நாள் வரை......
கடைசி ஆதமின் (அலை) வழித்தோன்றல் இவ்வுலகை விட்டு பிரியும் வரை....
மனிதன் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.....
அவன் இயந்திரங்களை படைத்தான்...
அது ஒரு யுகம்...
ஆனால் இது இறுதி யுகம்...
இயந்திரங்கள் மனிதர்கள் போல பேச பார்க்க சிந்திக்க கற்றுக் கொள்கிறது.....
மனிதன் உருவாக்கி விட்டான்....
பேசுவதை புரிந்து பதில் பேசவும் பார்ப்பதை புரித்து நடத்தையை மாற்றவும் இயந்திரங்களால் முடிகிறது....
மூளை போல் சிறிய controller கட்டுப் படுத்துகிறது அனைத்தையும் ....
அதில் ஒரு புதிய விடயம் உள்நுழைக் கப்பட்டு விட்டது....
செயற்கை நுண்ணறிவு....
இது ஒரு வகை algorithm
இது மனிதனால் எழுதப்பட்ட இயந்திரங்களின் செயல் நுண்ணறிவுக்கான கட்டளை.....
இதனால் இயந்திரங்களால் மனிதனை போல பார்க்க முடிகிறது பேச கற்றுக்கெள்ள முடிகிறது....
Neural network
Deep learning
Transformers
Computer vision
என பல Algorithm களின் கண்டுபிடிப்புகளால் மனிதன் செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தை சாத்தியமாக்கி விட்டான்......
அவன் Algorithm எனும் கட்டளையால் அந்த இயந்திரம் பேசுகிறது....
பார்க்கிறது....
மனிதன் வழங்கிய கட்டளையை இயந்திரத்தில் இருந்து பிரித்து விட்டால்
அதே cameras
அதே sensors ஆனால் இயக்கம் இருக்காது.....
மனிதன் மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தி விட்டான்......
அவை மனிதர்களுடன் பேசுகின்றன...
மனிதர்களின் வேலைகளை இலகுவாக்குகின்றன....
மனித இனத்தை வெல்ல முடியா விட்டாலும் தனிமனிதனுடன் போட்டி பேட்டு வெற்றி பெறுகின்றன....
மனிதனின் நிர்வாக துறைகளை நிர்வகிக்கின்றன....
எல்லா துறைகளையும் வளர்ச்சி நோக்கி தள்ளுகின்றன......
அனைத்து வளர்ச்சியும் வளர்ந்து கொண்டே இருப்பதில்லையே....
ஆகியும் அந்தமும் எல்லாவற்றுக்கும் உண்டு
இறைவனைத் தவிற....
மீண்டும் கூறுகிறேன்....
மனிதன் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.....
அவனால் இரு கண்களாளும் பார்க்க முடிகிறது....
பேச கேட்க புரிந்து கொள்ள முடிகிறது...
எவ்வாறு????
அவன் மரணித்து விட்டால்.... இது முடிவதில்லையே???
மரணம் என்றால் என்ன????
அவன் உயிருடன் இருக்கும் போது பார்த்த அதே கண்கள்....
அவன் உயிர் போன பிறகும்
கண்கள் நன்றாக இருக்கின்றன....
அதை பிரித்து எடுத்தால் உயிருடன் இருக்கும் இன்னொரு உடலில் பொருத்தலாம்...
ஆனால் அவன் உடலில் உயிர் இல்லையே
ஆதலால் அந்த கண்கள் அவன் உடலில் இயங்க வில்லை...
காதும் அவ்வாறு தான் கைகள் கால்கள்
மூளை
இதயம்....
அவர் இப்பேதுதான் நன்றாக இருந்தார் கதிரையில் சாய்ந்தார் இறந்து விட்டார்...
அந்த விளையாட்டு வீரன் பந்தை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கும் போதே கீழே விழுந்தான் இறந்து விட்டான்.....
அவர் விபத்தில் இறந்து விட்டார்
அவர் நோயால் இறந்து விட்டார்
அவர் வயோதிபத்தால் இறந்து விட்டார்...
இப்பேதுதான் பிறந்த குழந்தை இறந்து விட்டது....
மரணம் வயதையோ வேறு எந்த காரணியோ மதிக்க வில்லை..
சில நியதிகள் பூர்த்தி செய்யப் பட்டாலும் மரணம் வருகிறது....
தேதி குறிக்கப் பட்டது போல் நன்றாக இருந்த மனிதனையும் மரணம் காவுகிறது....
அப்படி ஆனால் மரணம் என்றால் என்ன?
மனிதனின் பொதுவான புரிதல் உயிர் போய் விட்டது......
உயிர் ஆத்மா (ரூஹ்) அப்படி என்றால் இன்றைய கால அறிவியல் என்ன கூறுகிறது....
வரையறை செய்ய முடியவில்லை தெரியாது.....
ஆனால் அல்லாஹ் கூறுகின்றான்......
وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا
(நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 17:85)
அல்லாஹு அக்பர்...
அவனே சிறந்த படைப்பாளன்...
நீங்கள் உயிருடன் இருக்கும் வரை அவன் கட்டளையை சுமக்கிறீர்கள்....
ஆகவே அவன் கட்டளைக்கு அடிபணிந்து கொள்ளுங்கள்....
அவன் கட்டளை உங்கள் உடலை விட்டு கலற்றப்பட்டால்
உங்களை இயக்கும் அந்த கட்டளை வரிகளை உங்கள் உடலில் இருந்து கலற்றும் வானவர் உங்களை அடைந்து விட்டால் அதன் பிறகு உங்களுக்கு தவனை இல்லை.....
وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا فَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ
இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 5:92)
مَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ وَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ
(இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
(அல்குர்ஆன் : 5:99)
மேலும் இறை கட்டளையை மனிதன் புரிந்து கொள்ள மறுக்கிறான்...
தர்க்கம் செய்கிறான்...
அவன் படைக்கப்பட்ட நோக்கத்தை இப்லீஸின் வழியில் செய்கிறான்...
இறை கட்டளையை நிராகரிக்கவும் செய்கிறான்.....
قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ
“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
(அல்குர்ஆன் : 7:12)
قَالَ فَبِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَۙ
(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 7:16)
قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ
(அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
(அல்குர்ஆன் : 15:39)
சிந்திப்பதற்காக....
وَ اِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْۙ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰيٰتِنَا لَا يُوْقِنُوْنَ
அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
(அல்குர்ஆன் : 27:82)
وَإِذَا وَقَعَ ٱلْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمۡ دَآبَّةٗ مِّنَ ٱلۡأَرۡضِ تُكَلِّمُهُمۡ أَنَّ ٱلنَّاسَ كَانُواْ بِـَٔايَٰتِنَا لَا يُوقِنُونَ
“நாங்கள் அவர்கள்மீது (அல்லாஹ்வின் சிருஷ்டி முடிவை உறுதி செய்யும்) தீர்ப்பை ஏற்படுத்தின போது, நாங்கள் அவர்களுக்கு பூமியிலிருந்து ஒரு விலங்கினை வெளிப்படுத்துவோம். அது அவர்களிடம் பேசும்: ‘நீங்கள் நம் அத்தாட்சிகளின் மீது நம்பிக்கை வைக்கவில்லை’”
Written By
I M Hanan
Faculty of Technology(R), 3rd Year
University of Colombo
No comments:
Post a Comment