குர்ஆனில் பெண்கள் பணிவாக உடையணிவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே ஹிஜாப் அணிவது என்பது உள்ளார்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு முறையாக நோக்கப்படுகிறது.
இன்றைய சமூகத்தில், பல பெண்கள் ஹிஜாபை தாங்களே தேர்ந்தெடுத்து அணிகின்றனர். ஹிஜாப் அணிவதன் மூலம் அவர்களது அழகு மறைக்கப்படவில்லை. மாறாக அவர்களது அழகை வெளிப்படுத்தும் வேறு முறையாக காண்கிறார்கள். இது அவர்களின் சுதந்திரத்தை பறிக்கவில்லை. அது அவர்களின் சொந்த தேர்வின் அடையாளமாக உள்ளது.
அத்தோடு உலகம் முழுவதிலும் ஹிஜாப் அணியும் பெண்கள் தொழில்நுட்பம், கல்வி, அரசியல் மற்றும் கலைவளங்கள் போன்ற பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்துள்ளனர்.
ஹிஜாப் அணிவது பற்றி அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் பல ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன.
சூரா அல் அஹ்ழாப் (33:59)
"நபியே! உங்கள் மனைவிகளுக்கும், உங்கள் மகள்களுக்கும், முஸ்லிம் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் மேலாடைகளை நீட்டிக்கும்படி கூறுங்கள். அதுவே அவர்களை அறியப்படுவதற்கும், தொல்லை கொள்ளப்படாமலிருக்கவும் உகந்ததாகும்..."
இன்று, ஹிஜாப் ஒரு கலாசார சின்னமாகவும், அழகிய பாணியாகவும் மாறியுள்ளது.
ஹிஜாப் என்பது ஒரு கட்டடத்தின் அடிப்படையில் அணியப்படும் ஒரு போர்வை அல்ல. அது இஸ்லாமிய மார்க்கத்தின் அடையாளத்தையும் ஒரு பெண்ணின் கரிசனமான ஆன்மிக காதலையும், இறைவன் மீதான மரியாதையையும் வெளிப்படுத்துகிறது என்பது தெளிவாக புலப்படும் உண்மையாகும்.
Written By
Rana Ajmeer
Faculty of Agro Technology and Rural Sciences (R), 1st Year
University of Colombo
No comments:
Post a Comment