Monday, August 18, 2025

விவசாயியின் கனவும், நம்பிக்கையும்

விவசாயின் பணி காலை விடியலுடன் ஆரம்பிக்கிறது. அவருடைய வியர்வை நிலத்தில் சிந்தும் போது, அது சூரியனின் வெளிச்சத்துடன் பசுமையாக ஜொலிக்கிறது. அவரின் காலடி சத்தம் பூமியில் சங்கீதம் போல ஒலிக்கிறது. 

அவர் பேசாமல் இருந்தாலும், அவரது மௌனம் உணவின் அழகியல் பேசுகிறது. ஒரு நிமிடம் அமைதியாய் பார்த்தால், நிலத்தில் நடக்கும் நிகழ்வுகள் பேச ஆரம்பிக்கும்.

மண் பசியாய் காத்திருக்கும் போது, அவன் கைகள் அதற்கு உற்சாகமாய் பதிலளிக்கும். சிறிய செயலும் அவனது உள்ளத்தில் வியப்பாய் ஒலிக்கிறது.

வெயில் கடுமையான போதிலும், விவசாயி தன் பயிர்கள் மீது பாசத்தை வைத்திருக்கிறான். ஒவ்வொரு வெப்பநிலையும், அவனுக்கு ஒரு சவாலாகிய தவமாகிறது.  

அவன் உடலில் பிழைபடும் வெப்பமும், மனதில் இருக்கும் உறுதிமொழியால் அழிக்கப்படுவதில்லை. சூரியனே சாட்சி, அவனது முயற்சி கனியாக விளைய வேண்டும் என்பதற்கான சபதம் போல.


நிலத்தில் இருப்பது மட்டும் விவசாயி அல்ல. அவன் காற்றின் வாசலிலும் கணத்தை காத்திருப்பவன். மழை எப்போது வரும்? எவ்வளவு வரும்? எந்த விதையை எப்படி பாதுகாக்க வேண்டும்?

அவன் எண்ணங்கள் மண்ணோடு பேசுகின்றன. எதிலும் தீர்வு தேடும் அவன் பார்வை, வாழ்வின் வேளாண் தத்துவமாக மாறுகிறது.

விவசாயி தூரத்தில் காணும் மேகங்களைப் பார்த்து, எதிர்பார்ப்பில் விதையை தூவுகிகிறார். அந்தக் கணம்மழையாக காற்றில் கலந்து வரும் போது—அவனுக்கு அது ஒரு அன்பு செய்தி போல.  

மழை பூமியை நனைக்கும் போது, அவன் கனவுகள் கதிரோளி போல மெல்ல வளர ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு துளி மழையும், அவன் எதிர்பார்ப்பின் அடையாளம்.

நிலம் வாடியிருந்தாலும், விவசாயியின் நம்பிக்கை வாடுவதில்லை. மூன்று மாதங்கள் தூக்கமின்றி பயிர்களை வளர்ப்பதற்கான பணி, எளிதல்ல. ஆனால், அவனது நெஞ்சில் தேங்கிய துணிச்சல், அவனை அப்படியே நிறுத்தாது.

அந்த துணிச்சல், நம் சமூக முன்னேற்பாட்டின் அடிப்படையாகவே மாறுகிறது. அவன் விதைக்கும் பயிர்களில், நம் எதிர்காலம் நிறைந்திருக்கிறது.

வாழ்க்கை சிலவேளையில் புரியாது அவனை வாட்டுகிறது. ஆனால் அவன் வாடாமல் நின்று, வளர்வதற்கே வழிகாட்டியாகிறான். அவனது கைகளில் நம் வாழ்க்கையின் ஆதாரம் உள்ளது.

ஒரு பயிர் மட்டுமல்ல, அவன் வளர்க்கும் ஒவ்வொரு விதையும், நம் வாழ்வின் அடையாளமாகிறது. அந்த விதைகளில், அவன் கனவுகள், நம் எதிர்காலங்களும் சேர்ந்து பயணிக்கின்றன.  

அவன் நிலத்தில் மட்டும் அல்ல... நம் வருங்காலம் கூட பூக்கும். அந்தப் பூக்கும் நறுமணத்தில், அவனது பேராசையும், பாசமும் கலந்து இருக்கும். 

பசுமை தான் அவன் மொழி. வளர்ச்சி தான் அவன் கவிதை. நம்பிக்கை தான் அவன் நெஞ்சின் இசை.


Written By

Mohammed Sameer

Faculty of Agro Technology and Rural Sciences (R), 3rd Year

University of Colombo


No comments:

Post a Comment

இஸ்லாம் கூறும் தாவரவியல் விஞ்ஞானம்

தாவரவியல் பற்றி அறிவியல் உண்மைகள் அல்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இதில் பல விடயங்கள் விஞ்ஞான அடிப்படையில் கூறப்படுகின்றன. இங்கே...