இளைய தலைமுறையினர் எந்த ஒரு சமூகத்திலும், நாடுகளிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றனர். இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தலைமையின் சுடரொளியாக இருக்கிறார்கள். அவர்களின் எண்ணங்கள், செயல்கள், கனவுகள் மற்றும் உற்சாகமே எதிர்காலத்தை உருவாக்கும் அடித்தளமாக இருக்கின்றன.
இளைஞர்கள் சக்திவாய்ந்தவர்கள். அவர்களுக்கு ஆற்றலும், ஆவலும், ஆர்வமும் நிரம்பியுள்ளது. புதிய யோசனைகள், தொழில்நுட்ப மேம்பாடுகள், சமூக மாற்றங்கள் எல்லாவற்றிலும் இவர்கள் முன்னணி பங்காளிகளாக இருக்கிறார்கள். உலகின் முக்கியமான மாற்றங்களை நிகழ்த்திய பல இயக்கங்களில் இளைஞர்கள் தான் முன்னிலை வகித்துள்ளனர்.
இளைஞர்களின் திறமை, புத்திசாலித்தனம், நேர்மை ஆகியவை நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கிய ஆயுதங்களாகும். நல்ல தலைமையை உருவாக்குவதற்கான வித்துகள் இன்றைய இளம் தலைமுறையினரிடம் இருக்கின்றன. ஆனால், இளைஞர்கள் தலைவர்களாக மாற விரும்பினால், அவர்களுக்கு சரியான வழிகாட்டல், நல்ல கல்வி மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவை கட்டாயமாக வேண்டும்.
அவர்களுக்குள் இருக்கும் சமூக உணர்வை வளர்க்க வேண்டும். வறுமை, கட்டமைப்பு குறைபாடுகள், வேலைவாய்ப்பின்மை போன்ற சவால்களை எதிர்கொண்டு முன்னேற அவர்களுக்கு தேவையான தன்னம்பிக்கை மற்றும் உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
முடிவில், இளைஞர்களின் வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியுடன் நேரடியாக தொடர்புடையது. அவர்களை ஊக்குவிக்க, வழிகாட்ட, நம்பிக்கை கொடுக்க நம்மெல்லாம் ஒன்றிணைக்க வேண்டும். ஏனெனில், இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்!
Written By
H. Ahamed Reeza
Faculty of Technology(R), 2nd Year
University of Colombo
No comments:
Post a Comment